Wednesday 14 September 2011

ஏமப்பேரூர்..

ஏமப்பேரூர்...

ஏமப்பேரூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 63  நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள்.அவர் பிறந்த ஊர் தான் திருஏமப்பேரூர்.
இந்த ஊரின் தற்போதைய பெயர் திருநெய்பேர் .

திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சென்றால் இந்த ஊரை அடையலாம்.இந்த சாலை பயணம் செய்ய வசதியானது.செல்லும் வழியெல்லாம் அருமையான ஆலயங்கள்,வயல்வெளிகள்,நீர்நிலைகள்.
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
சாலை ஓரத்திலே நாயன்மார் கோயிலும் அதற்கு எதிரில் சிவன் கோயிலும் உள்ளது.

தலச்சிறப்பு:

இறைவன் பெயர்: வன்மீகநாதர்
இறைவி பெயர்: உமா பரமேஸ்வரி

தேவார வைப்பு தலம்.  அப்பர் பெருமான் பாடல் - 1

நமிநந்தி அடிகள் வரலாறு:

நமிநந்தி அடிகள் அந்தணர் குளத்தில் பிறந்தவர். திருவாரூர் கோவிலில் விளக்கேற்ற சென்றார்.கோவில் அருகே உள்ள வீட்டில் சென்று விளக்கு எரிக்க எண்ணெய் கேட்டார். அங்கே இருந்த சமணர்கள் அவரை கேலி செய்து தண்ணீரால் விளக்கேற்ற கூறினார். நமிநந்தி அடிகள் நீரால் விளக்கு ஏற்றினார்.சமணர்கள் சைவ சமயத்தின் பெருமை உணர்ந்து  சைவத்தை தழுவினர்.திருவாரூர் கோவிலில் நடைபெற்ற விழாவில் பல தரப்பு மக்களும் வருவர். இவர்களால் தீண்ட பெற்ற நமி நந்தி அடிகள் தன வீட்டுக்குள் வராமல் நீராட சென்றார். நீராட வருவதற்கு முன்னர் தூங்கி விட்டார். கனவில் தோன்றிய சிவ பெருமான் திருவாரூரில் உள்ள அனைவரும் தன் பூத கணங்கள் என்று கட்டினர். தவறை திருத்தி கொண்டார் நமிநந்தியடிகள்.அடியவர்களின் கலீல் விழுந்து மன்னிப்பு கோரினார்.இப்படி போகிறது இவர் வரலாறு. 

இவருடைய குருபூஜை வைகாசி பூரம்.

ஆலயம்:

மிகவும் சிறிய ஆலயம். கோபுரம் கிடையாது. முகப்பு வாயில் மட்டுமே.நாங்கள் சென்ற சமயம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது.

அதலால் பிரகார வலம் வர முடியவில்லை. அர்ச்சகரை கேட்டோம். பிரகாரத்தில் விநாயகர்,முருகன்,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளதாக கூறினார்.

கோவிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தி அடிகள் உருவம் உள்ளது.

அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ளது. சுவாமி நீண்ட பணம்.தனி சன்னதி.சுவாமி மற்றும் அம்மன் சன்னதி ஒரே கட்டடத்தில் உள்ளது.

குறிப்புக்கள்:

அ. ஊர் மிகவும் சிறியது. சன்னதி தெருவில் மூன்று வீடுகள் மட்டுமே.கோவிலில் மிகவும் பழையது. பூஜைகள் சரிவர நடப்பது இல்லை.கூட்டமும் கிடையாது.கோவில் குளமும் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

ஆ.குடமுழுக்கு எப்ப்போது என்று தெரியவில்லை.திருவாரூர் கோவிலோடு இணைந்தது.

அர்ச்சகர் எண்:

ராஜேந்திர சிவாச்சாரியார்.
அலைபேசி எண்: 9444541508


புகைப்படங்கள்:
                                                          நமிநந்தி அடிகள்



குளம் தான்...கிரவுண்டு அல்ல...


முகப்பு.. 







No comments:

Post a Comment